Connect with us

கடும் நெருக்கடியில் GVM – துருவ நட்சத்திரம் ரிலீஸாக இத்தனை கோடி கொடுக்கணுமா..?

Cinema News

கடும் நெருக்கடியில் GVM – துருவ நட்சத்திரம் ரிலீஸாக இத்தனை கோடி கொடுக்கணுமா..?

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படம் குறித்து நாளுக்கு நாள் பல தகவல்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது .

தமிழ் சினிமாவின் ரொமான்டிக் இயக்குநர் என்று பெயரெடுத்த GVM இயக்கத்தில் சியான் விக்ரமின் நடிப்பில் உருவான திரைப்படமே துருவ நட்சத்திரம் .

ஏற்கனவே பல ஆண்டுகளாக தள்ளிப்போய் வந்த இப்படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது . அதன் படி கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது ஆனால் அப்படம் சொன்ன நேரத்தில் வெளியாகவில்லை .

இப்படம் ஆரம்பித்த நாள் முதல் பிரச்சனை மேல் பிரச்சனைகளை சந்தித்த படக்குழு எப்படியும் இப்படம் ரிலீஸ் ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

இந்நிலையில் ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் கௌதம் மேனன் வாங்கிய பல கோடி ரூபாய் பணத்தை கௌதம் மேனன் கொடுக்காமல் இருப்பதால் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என நீதிமன்றம் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டது.

இதனால் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்ட கௌதம் மேனன் வேறு வெளியின்றி துருவ நட்சத்திரம் படம் திரையிடப்படவில்லை என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்தார் .

இந்நிலையில், தற்போது அந்த அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்ய ரூ. 60 கோடியை GVM புரட்டிவிட்டதாகவும் விரைவில் இப்படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறித்து .

மேலும் இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. எது எப்படியோ படம் நல்ல படியா ரிலீஸ் ஆனா சந்தோசம் தான் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இணையத்தை கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர்..!!

More in Cinema News

To Top