Connect with us

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்.. புது அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் நடிகர் விஜய்

Actor_Vijay

Cinema News

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்.. புது அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் நடிகர் விஜய்

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் லெட்டர் பேடில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவதாகவும், தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்தார். மேலும், 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சியின் கொடி, சின்னம் மற்றும் கொள்கை போன்றவை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனத் தெரிவித்துள்ள நடிகர் விஜய், தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துக் கொண்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டு மக்களை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். இதனால் அவர் விரைவில் சினிமாவில் இருந்து விலகுவார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அவரது ரசிகர்ளும் விஜயின் அரசியல் வருகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக தனது அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள், திரைத்துறை நண்பர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் மற்றும் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது இந்த அறிக்கையை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பேட்டிங்கில் மிரட்டுமா டெல்லி..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top