Connect with us

சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை த்ரிஷா – வைரல் வீடியோ..

Cinema News

சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை த்ரிஷா – வைரல் வீடியோ..

விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜித் மற்றும் த்ரிஷா ஜோடியாக சென்னை விமான நிலையத்தில் வலம் வரும் காட்சிகள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் தான் விடாமுயற்சி.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அஜர்பைஜான் நாட்டில் பல மாதங்களாக முழு வீச்சில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்புக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன் ஒரு சின்ன இடைவேளை விடப்பட்டது. இந்நிலையில், தற்போது விடுமுறை முடிந்து மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் துவங்கியுள்ளது.

இதன்காரணமாக இப்படத்தில் ஒப்பந்தமான நடிகர் நடிகைகள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மீண்டும் அஜர்பைஜானுக்கு ஒவ்வருவராக செல்லகின்றனர் .

அந்தவகையில் தற்போது நடிகர் அஜித் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் இன்று அசர்பைஜானுக்கு செல்லும் வீடியோ சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிவந்துள்ளது.

இதனை கண்ட அவர்களது ரசிகர்கள் வழக்கம் போல் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top