Connect with us

திருவண்ணாமலை மகா தீபத்தை காண அனுமதி சீட்டுகளை பெறுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு..!!

Featured

திருவண்ணாமலை மகா தீபத்தை காண அனுமதி சீட்டுகளை பெறுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு..!!

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா வரும் 26 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி சீட்டுகளை பெறுவதற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் :

  • திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கான அனுமதி சீட்டுகள் நாளை மறுநாள் (நவ.24) முதல் ஆன்லைன் மூலம் பெறலாம்
  • 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண 500 கட்டணத்தில் 500 அனுமதிச் சீட்டுகள் விநியோகம் மாலை 6 மணிக்கு மகா தீபம் காண ₹600 கட்டணத்தில் 100
  • அனுமதிச் சீட்டுகள், 500 கட்டணத்தில் 1,000 அனுமதிச் சீட்டுகள் விநியோகம்
  • 5 கட்டணச் சீட்டு பெற ஆதார் அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி கட்டாயம் தேவை
  • மேலும் விவரங்களுக்கு : https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம் .

ஏற்கனவே திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை ஏறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அனுமதி சீட்டுகளை பெறுவதற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .மேலும் பக்கதர்களுக்காக தமிழக அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ள நிலையில் பக்கதர்கள் இந்த வசதிகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு வழிபாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா..? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!!

More in Featured

To Top