Connect with us

கோவையில் ரயிலை கவிழ்க்க திட்டம் தீட்டிய மூவர் – தட்டி தூக்கிய ரயில்வே போலீசார்..!!

Featured

கோவையில் ரயிலை கவிழ்க்க திட்டம் தீட்டிய மூவர் – தட்டி தூக்கிய ரயில்வே போலீசார்..!!

கோவையில் பயணிகள் ரயிலை கவிழ்க்க திட்டம் தீட்டிய மூவரை ரயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிட்கோ அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்து, ரயிலை கவிழ்க்க உ.பி.யைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான ராகேஷ் யாதவ், கிஷோர் சவுஹான், பப்லு சவுஹான் ஆகியோர் முயன்றதாக கூறப்படுகிறது.

இவர்களின் இந்த கீழ்த்தனமாக செயலை அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அவர்களை பின் தொடர்ந்துள்ளனர் இதையடுத்து தண்டவாளத்தில் கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றபோது அவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதையடுத்து அந்த ,மூவர் மீது வழக்கு பதிந்து போலீசார் நடத்திய விசாரணையில் . ரயில்வே போலீசார் அபராதம் விதித்த ஆத்திரத்தில், தண்டவாளத்தில் கற்கள் வைத்துள்ளதாக அந்த மூவரும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அபராதம் விதித்த காரணத்திற்காக ரயிலையே கவிழ்க்க முயன்ற சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top