Connect with us

ரகசிய திருமணத்திற்கு இதுதான் காரணம் – முதல்முறை வாய்திறந்த நடிகர் டாப்ஸி

Cinema News

ரகசிய திருமணத்திற்கு இதுதான் காரணம் – முதல்முறை வாய்திறந்த நடிகர் டாப்ஸி

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை டாப்ஸி வெளிநாட்டு மாப்பிள்ளையை கரம் பிடித்துள்ள நிலையில் இந்த ரகசிய திருமணம் குறித்து முதல் முறை மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ்,ஹிந்தி,மலையாளம் என பல மொழி படங்களில் பல சூப்பர் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி.

இதுமட்டுமின்றி இவரது கைவசம் பல பிக் பட்ஜெட் படங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. வெண்ணிற மேனியில் மெல்லிய இடையில் இருக்கும் இவருக்கு இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு ரகசியமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

நடிகை டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பிரபல பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவருடன் நீண்ட காலமாக காதலில் இருந்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் இவர்கள் நெருங்கிய உறவுகளுடன் ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் முதல் முறையாக தனது திருமணம் குறித்து நடிகை டாப்ஸி மனம்திறன் பேசியுள்ளார்.

எங்களது திருமணத்தை ரகசியமாக செய்யவேண்டும் என வேண்டுமென்றே செய்யவில்லை. எனக்கு நெருக்கமானவர்கள் எல்லோருக்கும் தெரியும்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்களை involve செய்ய எனக்கு விரும்பவில்லை. ஒரு பிரபலம் திருமணம் செய்தால் எப்படி எல்லாம் பலவிதமாக பேசுவார்கள் என தெரியும்.

இணையத்தில் உலா வரும் அவதூறு கருத்துக்களை ஒரு திரை பிரபலமாக நான் சகித்துக்கொண்டாலும் என்னுடைய கணவர் ஏன் அதை சந்திக்க வேண்டும். இதன்காரணமாகவே திருமணத்தை private நிகழ்ச்சியாக நடத்தினோம் என நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோடை வெயிலுக்கு குதூகலமாக வெளியானது குரங்கு பெடல் படத்தின் ட்ரைலர்..!!

More in Cinema News

To Top