Connect with us

உணர்ச்சிகள் பொங்க வெளியானது ‘வணங்கான்’ படத்தின் ட்ரெய்லர்..!!

Cinema News

உணர்ச்சிகள் பொங்க வெளியானது ‘வணங்கான்’ படத்தின் ட்ரெய்லர்..!!

பாலா இயக்கத்தில் சத்தமின்றி உருவான ‘வணங்கான்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் குடுக்கும் படங்களுக்கு பெயர் போன இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பாலா . இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இவரது படங்கள் காலம் கடந்து பேசும் அளவிற்கு மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது .

அந்தவகையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் வணங்கான். அருண்விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரோஷினி பிரகாஷ் கைகோர்க்க இவர்களுடன் மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இப்படத்தில் கமிட்டாகி நடித்துள்ளனர் .

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது . இந்நிலையில் இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

வழக்கம் போல் இயக்குநர் பாலாவின் உணர்ச்சி மிகு இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ படத்தின் ட்ரெய்லர் இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வசூல் மழையில் பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் - இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in Cinema News

To Top