Connect with us

“பிரதமர் முகத்தில் தோல்வி பயம் ” – பாய்ண்ட் பிடித்து பேசிய தமிழக முதல்வர்

Featured

“பிரதமர் முகத்தில் தோல்வி பயம் ” – பாய்ண்ட் பிடித்து பேசிய தமிழக முதல்வர்

தேர்தல் தேதி கூட அறிவிக்கவில்லை அதற்குள் பிரதமர் முகத்தில் தோல்வி பயம் நன்றாக தெரிகிறது என தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி உள்ள பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் நன்றாக் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது.

தி.மு.க.வைப் பற்றியும், அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி வரும் பிரதமர். அவர் கொண்டு வந்த எந்த திட்டங்களுக்கு நாம் தடையாக உள்ளோம் என தெரியவில்லை .

முதலில் அவர் எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்தத் ஒரு தகுதியும் இல்லை என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டுள்ள இந்த அறிக்கை தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கரூர் மரணங்கள்: "நாங்களும் ஆழ்ந்த மன வேதனையில் இருக்கிறோம்" – எஸ்.ஏ. சந்திரசேகர்

More in Featured

To Top