Connect with us

எப்பா படம் வேற லெவல் : ‘Manjummel Boys’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி

Cinema News

எப்பா படம் வேற லெவல் : ‘Manjummel Boys’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி

திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வரும் ‘Manjummel Boys’ படக்குழுவை நடிகரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

பொதுவாக மலையாள திரையுலகில் மினிமம் பட்ஜெட் படங்கள் அதிகளவில் வெற்றி படங்களாக உருவெடுக்கும் அந்த வரிசையில் தற்போது Manjummel Boys திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக தற்போது வலம் வருகிறது.

அணைத்து மொழிகளிலும் பட்டயகிளப்பி வரும் இப்படம் தமிழ் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது . இப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்து வருவது மட்டுமல்லாமல் தமிழ் சினிமா நட்சத்திரங்களும் மனதார பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில் Manjummel Boys படத்தை பார்த்த நடிகரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி கூறியதாவது :

“மலையாளத்தில் சமீபத்தில் வெளியான #ManjummelBoys திரைப்படம் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், அத்திரைப்படக் குழுவினரை இன்று நேரில் சந்தித்தோம். நாம் அப்படத்தை பாராட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்து அன்பை வெளிப்படுத்தினர்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, காட்சி அமைப்பு என அனைத்து வகையிலும் தரமான படைப்பாக #ManjummelBoys – ஐ தந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்” என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா - மும்பை அணிக்கு 170 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top