Connect with us

அப்பப்பா…வசனமே இல்லாமல் வெளியான வணங்கான் படத்தின் டீசர்..!!

Cinema News

அப்பப்பா…வசனமே இல்லாமல் வெளியான வணங்கான் படத்தின் டீசர்..!!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது .

உணர்ச்சி பொங்கும் படங்களுக்கு பெயர் போன இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பாலா . இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இவரது படங்கள் காலம் கடந்து பேசும் அளவிற்கு மக்கள் மனதில் பதிந்துள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை.

அந்தவகையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் வணங்கான். ஆரம்பத்தில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் சூர்யா சில பல காரணங்களால் பாதிலேயே வெளியேறினார் .

இதையடுத்து. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய் ஒப்பந்தமானார் . அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படம் குறித்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு ஒரு சிறப்பான தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது .

அதன்படி பாலாவின் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசரின் ஆரம்பம் முதல் இறுதி வரை வசனமே இல்லாமல் வெறும் ஆக்சன் காட்சிகளாக இருப்பதால் இப்படம் எந்த மாதிரியான கதையம்சம் கொண்டது என கணக்கிடமுடியவில்லை.

இருப்பினும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருவதால் படத்தின் ட்ரைலரை பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம் என காத்திருக்கின்றனர் .

இதோ அந்த ட்ரைலரை நீங்களும் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் - அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

More in Cinema News

To Top