Connect with us

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ திரைப்படத்தின் தலைப்பு வெளியானது

Cinema News

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ திரைப்படத்தின் தலைப்பு வெளியானது

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க உள்ள D50 படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய சினிமவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்ணிட்டு வெளியான கேப்டன் மில்லர் படம் எதிர்பார்ப்பை மிஞ்சிய வசூலை ஈட்டி வெற்றி படமாக உருவெடுத்தது .

இந்நிலையில் நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் மீண்டும் தனது டைரக்டர் பணியை இனிதே தொடக்கி உள்ளார்.

அந்தவகையில் தற்போது நடிகர் தனுஷின் 50 ஆவது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார் . ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவுள்ள இத்திரைப்படம் இந்தாண்டே வெளியாகும் என பட நிறுவனம் சிறப்பான தரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

More in Cinema News

To Top