Connect with us

உலகக்கோப்பை வென்றும் சோகத்தில் ரசிகர்கள் – அடுத்தடுத்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள்..!!

Featured

உலகக்கோப்பை வென்றும் சோகத்தில் ரசிகர்கள் – அடுத்தடுத்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள்..!!

சுமார் 17 வருடங்களுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கோலி , ரோஹித் , ரவிச்சந்திரன் அஸ்வின் , ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் 20 அணிகள் வீரர்களின் கோப்பை கனவுடன் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது . இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க சற்று தடுமாற்றத்துடன் ஆடியது.

இறுதியில் 20 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணியால் 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது . இந்த வெற்றியின் மூலம் 17 வருடங்களுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ஒருபக்கம் இந்திய அணி கோப்பை வென்றதை நாடே கொண்டாடி வரும் நிலையில் மறுபக்கம் ரசிக்கரால் அளவற்ற சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

என்ன காரணம் என்று கேட்கிறீர்களா இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கோலி , ரோஹித் , ரவிச்சந்திரன் அஸ்வின் , ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது தான் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top