Connect with us

3 நாட்களில் இத்தனை கோடியா..? கல்கி படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

3 நாட்களில் இத்தனை கோடியா..? கல்கி படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை வெளியிட்டது படக்குழு..!!

இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் ஒன்று கூடி நடித்து திரையரங்குகளில் வெளியாகி உள்ள கல்கி 2898 AD திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கல்கி 2898 AD . அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பட்டானி என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் ஒன்று கூடி நடித்துள்ளது .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தமிழ் , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் கடந்த 3 நாட்களுக்கு முன் வெளியானது .

இந்நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 3 நாட்களில் செய்துள்ள அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது . அதன்படி ‘கல்கி 2898 AD’ திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ₹415 கோடி வசூல் செய்துள்ளதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே : குடும்பத்துடன் விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா -வைரல் போட்டோஸ்..!!

More in Cinema News

To Top