Connect with us

வெற்றிகரமாக நிறைவடைந்தது ‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு..!!

Cinema News

வெற்றிகரமாக நிறைவடைந்தது ‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு..!!

கவின் நடிப்பில் உருவாகி வந்த ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் தான் கவின்.

பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய கவினுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய கவினுக்கு முதல் படமே தாறுமாறான வெற்றியை கொடுத்தது .

இதையடுத்து டாடா என்ற திரைப்படத்தில் நடித்த கவினுக்கு அப்படமும் மாபெரும் வெற்றியை தேடி தந்தது கணேஷ் கே பாபு இயக்கிய இந்த படமும் கவினுக்கு அசத்தலான வெற்றியை தேடி தர தற்போது அடுத்தடுத்த படங்களில் கவின் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் .

அந்தவகையில் கவினின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஸ்டார். இயக்குனர் இளம் இயக்கி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இதுநாள் வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுவரை கவின் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில் ஸ்டார் படமும் அவருக்கு வெற்றியை தேடி தருமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹைதராபாத்தில் இன்று அசத்தப்போவது யார்..? SRH - RR இன்று பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top