Connect with us

வேற மாறி வேற மாறி : வெளியானது எஸ்.கே.வின் அமரன் படத்தின் டீசர்

Cinema News

வேற மாறி வேற மாறி : வெளியானது எஸ்.கே.வின் அமரன் படத்தின் டீசர்

எஸ்.கே.வின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள SK21 படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் டீஸர் வெளியாகி தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது .

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் SK21 .

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் .

இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு நீண்ட நாட்களாக ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு ஒரு சிறப்பான தரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் ஒர்க் அவுட் மற்றும் துப்பாக்கியை கையாளும் விதம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழு ஏற்கனவே வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது .

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் அவரது SK21 படத்தின் தலைப்பு மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சிவகார்த்திகேயனின் முரட்டு தனமான நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க ராணுவ படமான உருவாகி உள்ள இந்த படம் ஒரு உண்மை கதை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தரமான டீசர் வெளியிட்டுள்ளது.

முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி உள்ள இந்த படம் சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திராத கதையம்சம் கொண்ட படமாக இருக்கும்.

இதோ அந்த டீசரை பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கடின இலக்கை கொடுக்குமா கொல்கத்தா - டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top