Connect with us

பேங்காக்கில் தொடங்கியது நடிகர் தனுஷின் ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு..!!!

Cinema News

பேங்காக்கில் தொடங்கியது நடிகர் தனுஷின் ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு..!!!

நடிகர் தனுஷின் 51-வது படமான குபேரா படத்தின் படப்பிடிப்பு இன்று பேங்காக்கில் தொடங்கி உள்ளதாக போட்டோவுடன் கூடிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

இந்திய சினிமவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்ணிட்டு வெளியான படம் கேப்டன் மில்லர் எதிர்பார்ப்பை மிஞ்சிய வசூலை ஈட்டி வெற்றி படமாக உருமாறியது.

இதையடுத்து நடிகர் தனுஷ் தற்போது பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் . அந்தவகையில் அவரது 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படம் மாபெரும் பொருட் செலவில் தயாரிக்க படுவதாக கூறப்படுகிறது .

இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் நடிக்கின்றனர்.

குபேரா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .

அதன்படி மாபெரும் பொருட் செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பேங்காக்கில் தொடங்கி உள்ளதாக போட்டோவுடன் கூடிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என்னென்ன பண்ணிருக்காங்க பாருங்க - 'அரண்மனை-4' படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி..!!

More in Cinema News

To Top