Connect with us

விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Cinema News

விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோககிளில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. வில்லன் ஹீரோ என பல அவதாரங்களை எடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி , மலையாளம் என பல மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘மகாராஜா’ நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படம் வரும் 14-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மக்கள் செல்வன் நடிப்பில் விரைவில் ‘விடுதலை 2’ படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரு கோடி வாங்கினேனா..? ஜாபர்சாதிக் வழக்கில் என்னை சேர்த்து விட முயற்சிக்கிறார்கள் - இயக்குநர் அமீர் சாடல்

More in Cinema News

To Top