Connect with us

சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியானது..!!

Cinema News

சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியானது..!!

நடிகர் சித்தார்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் 1st லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த் . நடிகர் பாடகர் , பல பரிமாணங்களை கொண்டுள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது .

இந்நிலையில் நடிகர் சித்தார்த் அன்மை காலமாக நல்ல பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மாப்ள சிங்கம், களத்தில் சந்திப்போம் படங்களை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை 7 மைல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் 1st லுக் போஸ்டர் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது . MissYou என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top