Connect with us

மக்கள் செல்வனின் ‘மகாராஜா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!!

Cinema News

மக்கள் செல்வனின் ‘மகாராஜா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மகாராஜா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோககிளில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. வில்லன் ஹீரோ என பல அவதாரங்களில் கலக்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி , மலையாளம் என பல மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘மகாராஜா’ நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தாயே தாயே’ என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இதோ இந்த பாடலை கேட்டு உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top