Connect with us

கார்த்தி – அரவிந்த் சாமி காம்போவில் உருவாகி உள்ள மெய்யழகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

Cinema News

கார்த்தி – அரவிந்த் சாமி காம்போவில் உருவாகி உள்ள மெய்யழகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

கார்த்தி , அரவிந்த் சாமி காம்போவில் உருவாகி வரும் மெய்யழகன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் அண்ணனை போலவே மாஸ் ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் கார்த்தியின் கைவசம் தற்போது சர்தார் 2 , வா வாத்தியாரே உள்ளிட்ட படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது மெய்யழகன் என்ற படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

பிரேம் குமார் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தில் கார்த்தியுடன் கைகோர்த்து அரவிந்த் சாமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் எதுவும் சமீப காலமாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ’மெய்யழகன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது .

அதன்படி கார்த்தி , அரவிந்த் சாமி காம்போவில் தரமாக தயாராகி வரும் மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'குக் வித் கோமாளி' புகழ் செஃப் தாமு காலமானார்! பத்மஸ்ரீ விருது முதல் கின்னஸ் சாதனை வரை... சமையல் உலகின் ஜாம்பவான் மறைவு!

More in Cinema News

To Top