Connect with us

நாட்டாமை டீச்சர் மகள் சினிமாவில் ஹீரோயின்! யாருடன் தெரியுமா?

Cinema News

நாட்டாமை டீச்சர் மகள் சினிமாவில் ஹீரோயின்! யாருடன் தெரியுமா?

1994ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பு, மீனா ஆகியோர் நடித்த ‘நாட்டாமை’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியடைந்த படமாகும். அந்த படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ராணி, குறுகிய நேரமே வந்தாலும் ரசிகர்களின் மனதில் ஆழமான இடம் பிடித்தார்.

அதன் பின்னர் கர்ணா, அவ்வை சண்முகி, ஜெமினி உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்த அவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையிலும் மீண்டும் நடித்து வந்தார்.

இந்த நிலையில், டீச்சராக நடித்ததன் மூலம் இன்றும் மக்கள் நினைவில் இருக்கும் நடிகை ராணியின் மகள் தற்போது சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் மூலம் தார்னிகா என்ற பெயரில் ராணியின் மகள் ஹீரோயினாக தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி, ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top