Connect with us

ராயனுக்கு மிக்க நன்றி – நடிகை துஷாரா விஜயன் போட்ட நெகிழ்ச்சி பதிவு..!!

Cinema News

ராயனுக்கு மிக்க நன்றி – நடிகை துஷாரா விஜயன் போட்ட நெகிழ்ச்சி பதிவு..!!

தனுஷின் வெறித்தனமான இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் ராயன் படத்தில் அனைவரையும் தனது நடிப்பால் வியக்க வைத்த நடிகை துஷார தற்போது இப்படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

திரையுலகில் நடிகராக , பாடகராக , பாடலாசிரியராக கலக்கி வந்த நடிகர் தனுஷ் ராயன் என்ற அவரது 50 ஆவது திரைப்படத்தின் மூலம் வெறித்தனமான இயக்குநர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார் .

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் அவருடன் சேர்ந்து சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் . கடந்த 26 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது ரசிகர்களின் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது .

அதிலும் குறிப்பாக இப்படத்தில் தனது அபார நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்த நடிகை துஷாரா விஜயனின் துர்கா கதாபாத்திரத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் மூலம் தனக்கு கிடைக்கும் பாராட்டுகளை கண்டு நெகிழ்ந்து போயுள்ள நடிகை துஷாரா விஜயன் ராயம் படக்குழுவுக்கும் தனுஷுக்கும் நன்றி தெரிவித்து உருவகமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகை துஷாரா போட்டுள்ள பதிவில் கூறிருப்பதாவது :

துர்கா கதாபாத்திரத்துக்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும் மக்களால் தான் சாத்தியமானது . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கிய ராயன் திரைப்படத்திற்கு கிடைத்த ஆதரவிற்கு பெரிய நன்றிகள் கூற கடமைப்பட்டுள்ளேன் .

துர்கா கதாபாத்திரத்துக்கு தங்களின் அன்பும், தங்களின் அரவணைக்கும் வார்த்தைகளும் என் மனதிற்கு நெருக்கமாகவே நிலைத்திருக்கும் .

எங்கள் இயக்குனர் தனுஷுக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் மிகப்பெரிய நன்றியை கூற கடமைப்பட்டியிருக்கிறேன் ராயன் படக்குழுவுக்கு மிக பெரிய நன்றிகள் இதுபோல் தொடர்ந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்க உழைத்து கொண்டே இருப்பேன் என நடிகை துஷாரா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் மேடையில் டிடிஎஃப் வாசன் சொன்ன பதில்... கைதட்டி ஆரவாரம் செய்த ரசிகர்கள்! கடுப்பான ரம்யா கிருஷ்ணன்!

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top