Connect with us

“ஹாலிவுட் ரசிகர்களுக்காக ‘LEO’ குழுவினரின் செய்த விஷயம்! இப்படி ஒரு முயற்சியா?!”

Cinema News

“ஹாலிவுட் ரசிகர்களுக்காக ‘LEO’ குழுவினரின் செய்த விஷயம்! இப்படி ஒரு முயற்சியா?!”

தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர்களுக்கு தமிழகத்தை தாண்டி, இந்தியாவையும் தாண்டி ஹாலிவுட்டிலும் ரசிகர்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஹாலிவுட் திரையுலக ரசிகர்களுக்காக ‘லியோ’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீசுக்கு ஒரு புதுமையான முயற்சி செய்யப்பட்டு இருப்பதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ‘லியோ’. இந்த படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் முதல் முறையாக தளபதி விஜய்யின் திரைப்படம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு ஆங்கில மொழி திரைப்படமாகவும் வெளியாக உள்ளது.

தளபதி விஜய், அனிருத் மற்றும் லோகேஷ் ஆகியோர்களுக்கு ஹாலிவுட்டிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக இந்த புதுமையான முயற்சி செய்துள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே ‘லியோ’ படத்தை திரையரங்குகளில் ஆங்கில மொழியில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் லலித் ஒரு பேட்டியில் கூறிய நிலையில் அது கடைசி நேரத்தில் முடியாமல் போனது. ஆனால் தற்போது ஓடிடியில் ஆங்கிலத்தில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top