Connect with us

“இலவச நூலகங்கள் பல திறந்துவைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்! குவியும் பாராட்டுகள்!”

Cinema News

“இலவச நூலகங்கள் பல திறந்துவைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்! குவியும் பாராட்டுகள்!”

திரைப்படங்களில் முழுமையாக கவனம் செலுத்தி நடித்து வரும் நடிகர் விஜய், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அண்மையில் பள்ளி மாணவ,மாணவிகளை நேரில் அழைத்து கல்வி உதவி தொகை வழங்கி தமிழகத்தில் அரசியல் களத்தில் கவனம் பெற்றார்.

இந்நிலையில் தற்போது மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நூலகம் துவங்கி வருகின்றனர். மாணவ,மாணவிகளிடையே புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக துவங்கப்பட்டு வரும் இந்த தளபதி விஜய் நூலகத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.

இந்நிலையில் கோவை தெற்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் தலைவர் கோவை விக்கி தலைமையில் கோவை கிணத்துகடவு தொகுதி, எட்டிமடை பகுதியில் விஜய் நூலகம் துவங்கப்பட்டது.

நூலகத்தை துவக்கிய விக்கி மற்றும் இளைஞரணி தலைவர் பாபு ஆகியோர் பேசுகையில், இந்த நூலகத்தில் தினசரி நாளிதழ்கள், கதை புத்தகங்கள் மட்டுமின்றி மாணவ, மாணவிகள் நீட் தேர்வு, நுழைவு தேர்வு, வேலை வாய்ப்புகளுக்கான தகுதி தேர்வு உள்ளிட்ட தங்களது பல்வேறு விதமான தேர்வுகளை எதிர் கொள்வதற்கான தேவையான புத்தகங்களும் இங்கு இருப்பதாக கூறிய அவர், அதே நேரத்தில் இங்கு இலவச இணைய தள வசதியும் ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். நூலகம் துவக்க விழாவில், விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின் துறை அமைச்சருக்கு சவால் விட்ட அன்புமணி..!!

More in Cinema News

To Top