Connect with us

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் – வாக்களித்த சினிமா பிரபலங்களின் வைரல் புகைப்படங்கள்..!!

Cinema News

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் – வாக்களித்த சினிமா பிரபலங்களின் வைரல் புகைப்படங்கள்..!!

தெலங்கானா மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையியல் தங்களது கடமையை செய்வதற்காக வாக்குச்சாவடிக்கு வந்த சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை கடந்த 28 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் இன்று அம்மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தெலங்கானாவில் 3.26 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் . இந்நிலையில் தெலங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவி வரும் வருகிறது . இதனால் இம்முறை இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற போகிறது என்பது தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் தங்களது கடமையை அறம்பட செய்திட தெலங்கானா மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்கு பதிவு செய்து வரும் நிலையில் திரை பிரபலங்களும் தங்களது கடமையை செய்ய குடுமபத்துடன் வந்து ஓட்டு போட்டுவிட்டு சென்றனர்.

அந்தவகையில் மகேஷ் பாபு , ராணா , நானி , வெங்கடேஷ் , நாகர்ஜுனா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் குடும்பத்துடன் ஓட்டு வந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top