Connect with us

தமிழ் திரையுலகிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி.. இயக்குனர் ஆர்த்தி குமார் காலமானார்

Director_AarthiKumar

Cinema News

தமிழ் திரையுலகிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி.. இயக்குனர் ஆர்த்தி குமார் காலமானார்

தமிழ் திரையுலகிற்கு மற்றொரு அதிர்ச்சியாக இயக்குனரும் நடிகருமான ஆர்த்தி குமார் உடல்நலக்குறைவால் திருநெல்வேலியில் காலமானார். கடந்த 2023ஆம் ஆண்டில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் மரணமடைந்த நிலையில், 2024 ஜனவரியில் பவதாரிணி காலமானார். இந்நிலையில் தற்போது ஆர்த்தி குமார் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இயக்குனர் ஆர்த்தி குமாரின் இயற்பெயர் சுரேஷ் குமார் ஆகும். சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் தனது பெயரை ஆர்த்தி குமார் என மாற்றிக் கொண்டார்.

நடிகர் சத்யராஜின் தீவிர ரசிகரான ஆர்த்தி குமார் 2004இல் சத்யராஜ், மறைந்த நடிகை பிரதியுஷா, வடிவேலு, மணிவண்ணன், இளவரசு உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான சவுண்ட் பார்ட்டி படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் மிகவும் பிரபலமான காமெடி டிராக் முழுவதையும் ஆர்த்தி குமாரே எழுதி இருந்தார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் சத்யராஜை வைத்து அழகேசன் என்ற படத்தை இயக்கி இருந்தார். மேலும், பெரியாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ராஜாஜியாகவும் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்.

இந்நிலையில், சில காலமாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்த ஆர்த்தி குமார், உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டம் ஹைகிரவுண்ட் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . எனினும், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொரு காட்சியும் தரம் - வெளியானது கவினின் ஸ்டார் படத்தின் ட்ரைலர்..!!!

More in Cinema News

To Top