Connect with us

என்ன மக்களே ரெடியா – அயலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

என்ன மக்களே ரெடியா – அயலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது .

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான திரைப்படம் தான் அயலான்.

சயின்ஸ் பிக்சன் படமாக உருவான இப்படத்தில் நம்ப வீட்டு பிள்ளை எஸ்.கே ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியான நாள் முதல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் உலகம் முழுவதும் நல்ல வசூலை ஈட்டி வரும் அயலான் படம் பல கோடி லாபம் பெற்று வருவதாக தகவல் பரவி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் படக்குழுவே இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது .

அதன்படி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய அயலான் படம் இதுவரை மொத்தமாக 75 கோடி வரை வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது மேலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இப்படம் எப்போது OTT யில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது அந்த தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி அயலான் வரும் பிப்ரவரி 9-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வான்கடே மைதானத்தில் வானவேடிக்கை காட்டுமா மும்பை..? கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்..!!

More in Cinema News

To Top