Connect with us

டி20 உலக கோப்பை : வங்கதேச அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி..!!

Featured

டி20 உலக கோப்பை : வங்கதேச அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி..!!

ரசிகர்களின் ஆரவாரத்துடன் இனிதே தொடங்கியுள்ள டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வங்கதேச அணிக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

இந்த தொடரில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வாங்க தேசம் அணிகள் விளையாடுகிறது .

இந்த போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

அடுத்து வந்த ரிஷப் பண்ட் வந்த நொடி முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய ரிஷப் அரைசதம் கடந்த நிலையில் வெளியேறினார் . அடுத்து வந்த சூரியகுமார் பங்களாதேஷ் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட அவரும் 31 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்கள் சேர்த்து . இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது வங்கதேச அணி விளையாடி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top