Connect with us

வெற்றிநடை போடும் ஹிப் ஹாப் ஆதியின் Pt Sir – இதுவரை செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

வெற்றிநடை போடும் ஹிப் ஹாப் ஆதியின் Pt Sir – இதுவரை செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் ஹிப் ஹாப் ஆதியின் Pt Sir திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் கலகலப்பான கதாநாயகனாகவும் கலக்கி வருபவர் ஹிப்ஹாப் ஆதி . இவரது இசையிலும் நடிப்பிலும் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் தற்போது உருவாகி உள்ள புதிய படம் தான் ‘PT சார்’ . கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் ஏக போக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், பாண்டியராஜன், இளவரசு,தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

இப்படம் கடந்த 24 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷுடன் ஹிப் ஹாப் ஆதி மற்றும் இயக்குனர் கார்த்தி வேணுகோபாலன் இணைந்து கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தை கூட தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ள Pt Sir திரைப்படம் உலகளவில் சுமார் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top