Connect with us

காங்கிரஸ் நிர்வாகி சந்தேக மரணம் – சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

Featured

காங்கிரஸ் நிர்வாகி சந்தேக மரணம் – சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இ.பி.எஸ் கூறிருப்பதாவது :

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் 2 நாட்களாக காணவில்லை என்று, அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.

தமிழகத்தில் எந்தவொரு குற்றச் செயலையும் சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் – ஒழுங்கின் மீது எந்த அக்கறையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.

ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் – ஒழுங்கை காக்க ஆக்கபூர்வத்துடன் செயல்படுமாறு அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேரளாவில் முதல்முறையாக வரலாற்றில் பெயர் பதித்த லோகா!

More in Featured

To Top