Connect with us

அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது சூரியின் கருடன் பட ட்ரைலர்..!!

Garudan - Trailer

Cinema News

அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது சூரியின் கருடன் பட ட்ரைலர்..!!

சூரி நடிப்பில் உருவாகி உள்ள கருடன் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று கதையின் நாயகனாக தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் நடிகர் சூரி.

இவரது நடிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் சூரியின் நடிப்பு திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்நிலையில் இவரது நடப்பில் தற்போது புதிய படம் உருவாகி உள்ளது. சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கருடன் என பெயரிடப்பட்டுள்ளது .

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சமுத்திர கனி,உன்னிமுகுந்தன் ரேவதி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் ரிலீஸுக்கு தேவையான அனைத்து பணிகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன .

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

ட்ரைலரின் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான ஆக்சன் காட்சிகள் வருவது சூரியின் நடிப்பை மேலும் மெழுகிற செய்துள்ளது போல் தெரிகிறது.

இதோ இந்த ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இரண்டு பாகங்ககளாக உருவாகிறதா இளையராஜாவின் பயோபிக்..? வெளியான டக்கர் தகவல்..!!

More in Cinema News

To Top