Connect with us

சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக் ரிலீஸ் எப்போது..? வெளியானது முக்கிய அப்டேட்

soorarai-pottru-remake

Cinema News

சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக் ரிலீஸ் எப்போது..? வெளியானது முக்கிய அப்டேட்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ஹிட் அடித்த சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் தயாராகி வரும் நிலையில், படத்தின் பெயர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உண்மை வரலாற்றை தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படம் சூரரைப் போற்று. இதில் சூர்யா ஹீரோவாகவும், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாகவும் நடித்தனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

சூர்யாவின் 2டி என்டெர்டைன்மெண்ட் தயாரித்த இந்த படம் கொரோனா காரணமாக 2020இல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது. படம் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தின் இந்தி ரீமேக் தற்போது தயாராகி வருகிறது. இந்தி ரீமேக்கையும் சுதா கொங்கரா இயக்கம் நிலையில், சூர்யாவின் 2டி என்டெர்டைன்மெண்ட் நிறுவனம் அருண் பாட்டியா, விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் சூர்யா நடித்த வேடத்தில் அக்ஷய் குமாரும், அபர்ணா பாலமுரளி நடித்த வேடத்தில் ராதிகா மதனும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது படத்திற்கு சர்பிரா என பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தை 2024 ஜூலை 12 அன்று ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top