Connect with us

தமிழக பட்ஜெட்டில் திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் இத்தனை திட்டங்களா..?

Featured

தமிழக பட்ஜெட்டில் திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் இத்தனை திட்டங்களா..?

தமிழக சட்டப்பேரவையில் 2024 -25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செத்தார்.

சட்டப்பேரவையில் சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக தமிழகத்தின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் தங்கம் தென்னரசு ஏராளமான திட்டங்கள் குறித்து விவரித்தார். அதில் திருச்சி மாவட்டத்திற்கான பல திட்டங்களையும் அமைச்சர் வாசித்துள்ளார்.

2024-25 தமிழ்நாடு பட்ஜெட்டில் திருச்சி மாவட்டத்திற்கான அறிவிப்புகள் குறித்த முழு விவரம் :

  • திருவெறும்பூர் பகுதியில் உயர் பாதுகாப்பு கொண்ட நவீன சிறைச்சாலை திருவெறும்பூர் பகுதியில் ₹104 கோடி மதிப்பில் கட்டப்படும்
  • திருச்சி – ஸ்ரீரங்கம் இடையே உயர் மட்ட பாலம் வரும் நிதியாண்டில் அமைக்கப்படும்
  • திருச்சி மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்லூரி மாணவர் விடுதி கட்டப்படும்
  • அரசு தனியார் பங்களிப்பு முறையில் பொதுக்கழிப்பிடங்களை நவீன முறையில் சீரமைத்து, பராமரிக்க திட்டம் செயல்படுத்தப்படும்
  • திருச்சியில் ஓடும் காவிரி ஆற்றின் கரையை ஒட்டிய பகுதியில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வு நடத்தப்படும்.உள்ளிட்ட திட்டங்கள் திருச்சி மாவட்டத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top