Connect with us

சிறைக்கு செல்லும் நடிகர் எஸ்.வி. சேகர் – காரணம் என்ன தெரியுமா..?

Cinema News

சிறைக்கு செல்லும் நடிகர் எஸ்.வி. சேகர் – காரணம் என்ன தெரியுமா..?

பழம்பெரும் நடிகரான எஸ்.வி. சேகருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் எஸ்.வி. சேகர்.

நடிகர், இயக்குநர் , திரைக்கதை ஆசிரியர் என திரையுலகில் பன்முக திறமை கொண்ட மனிதராக வலம் வந்த இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் ஏராளமான படங்களில் பணியாற்றி உள்ளார்.

காலம் சென்ற பின் நடிப்பதில் இருந்து அரசியலில் கால் பதித்த இவர் சர்ச்சை பேச்சுகளுக்கு சொந்தக்காரராக உள்ளார் .

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை எஸ்.வி. சேகர் பதிவிட்ட விவகாரம் மிக பெரிய பூதாகாரமாய் வெடித்தது .

எஸ்.வி. சேகரின் இந்த செயலுக்கு பல தரப்பில் இருந்து அவருக்கு கண்டனங்களும் வலுத்தது . இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது .

இந்நிலையில் ர் எஸ்.வி. சேகர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதன் காரணமாக அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மட்டுமல்லாமல், ரூ. 15 ஆயிரம் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.

திரையுலகில் கொடி கட்டி பரந்த எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை என்ற செய்தி தமிழகத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top