Connect with us

எப்பா கெத்துபா நீ : சர்வதேச திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயனின் புதிய படம்..!! அவரே சொன்ன டக்கர் தகவல்..

Cinema News

எப்பா கெத்துபா நீ : சர்வதேச திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயனின் புதிய படம்..!! அவரே சொன்ன டக்கர் தகவல்..

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரியின் நடிப்பில் உருவாகி உள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக அரங்கில் ப்ரீமியர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றுள்ளது.

இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

நமது “சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் “தயாரிப்பில் உருவாகியுள்ள “கொட்டுக்காளி” திரைப்படம் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுங்கான பிரிவில் தேர்வாகி உள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

இத்திரைப்படத்தை உலகத் தரத்தில் இயக்கியுள்ள இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் நடித்துள்ள சூரி அண்ணன், அன்னாபென் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்பும், மகிழ்ச்சியும், பாராட்டுக்களும்.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்தியேக திரையிடலுக்கு தேர்வாகியுள்ள முதல் தமிழ்த்திரைப்படம் நமது “கொட்டுக்காளி” என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி . இது போன்றதொரு பெருமைக்குரிய படைப்பை தயாரிக்க உத்வேகம் அளித்து அதை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லவும் ஊக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கும் எனது அன்பிற்குரிய ரசிகர்களாகிய உங்களுக்கே அனைத்து பெருமையும் சேரும் என சிவகார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘ரிவால்வர் ரீட்டா’ படப்பிடிப்பு நிறைவு..!!

More in Cinema News

To Top