Connect with us

பூஜையுடன் தொடங்கிய விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் காம்போவில் உருவாகும் புதிய படம்..!! வைரலாகும் பூஜா கிளிக்ஸ்..

Cinema News

பூஜையுடன் தொடங்கிய விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் காம்போவில் உருவாகும் புதிய படம்..!! வைரலாகும் பூஜா கிளிக்ஸ்..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் முதல் பாலில் சிக்ஸர் அடித்தது போல் முதல் படத்திலேயே மக்களின் மனதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்டார் .

இதையடுத்து இவரது இரண்டாவது படமான லவ் டுடே படத்தில் இவரே இயக்கி நடிக்கவும் செய்திதிருந்தார். மிக மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்று 100 கோடி கலைக்சனையும் தாண்டி சாதனை படைத்தது . குறிப்பாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரதீபுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க உள்ளார் . மேலும் படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதெற்கெல்லாம் மேல் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி மக்கள் - ஓபிஎஸ் கடும் கண்டனம்

More in Cinema News

To Top