Connect with us

‘அயலான்’ Pre ரிலீஸ் நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் மாஸ் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன் – வைரல் போட்டோஸ்..

Cinema News

‘அயலான்’ Pre ரிலீஸ் நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் மாஸ் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன் – வைரல் போட்டோஸ்..

பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கும் அயலான் படத்தின் Pre ரிலீஸ் நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் சிவகார்த்தியேனின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ‘அயலான்’ .

ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் இப்படத்தின் Pre ரிலீஸ் நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் அயலான் படத்தின் Pre ரிலீஸ் நிகழ்ச்சி வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றுள்ளனர், மேலும், நம்ப எஸ்.கே வின் குழந்தைகள் ஆராதனா மற்றும் மகன் குகன் இருவரும் கலந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திரை பிரபலங்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Jailer 2 Box Office: மீண்டும் மாஸ் காட்டிய ரஜினி! ஒரே நாளில் ரூ.24 கோடி வசூல்.. ரூ.1000 கோடியை நெருங்குமா ஜெயிலர் 2?

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top