Connect with us

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்..!!

Cinema News

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்..!!

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று அவரது ரசிகர்களுக்கு சிறப்பான தரமான சர்ப்ரைஸ் ஒன்று காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் நம்ப எஸ்.கேவின் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ’அயலான்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் வசூலிலும் 90 கோடி வரை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது .

இதையடுத்து, எஸ்.கேவின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படைத்தான் SK 21 ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வருகிறது .

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்து வர இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அழகான மெட்டுக்களை போட்டு வருகிறார் .

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் கேட்டு SK ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வரும் நிலையில் தற்போது ஒரு குட்டி அப்டேட் கிடைத்துள்ளது.

அந்த அப்டேட் என்னவென்றால் எஸ்கே 21 படத்தின் டீசரை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்.17 ஆம் தேதியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top