Connect with us

இணையத்தை கலக்கும் நடிகர் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ பட டிரைலர்..!!

Cinema News

இணையத்தை கலக்கும் நடிகர் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ பட டிரைலர்..!!

நடிகர் மம்மூட்டியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி உள்ள ‘பிரம்மயுகம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது .

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மம்மூட்டியின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமே ‘பிரம்மயுகம்’.

ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது .

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முதல் தோற்றமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த சில நாட்களிலேயே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் தாறுமாறான வரவேற்பை பெற்றது .

அன்று முதல் இப்படத்தை காண ரசிகர்கள் செம ஆவலாக இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

திகிலூட்டும் வசனங்கள், கருப்பு வெள்ளைக் காட்சிகள், மம்மூட்டியின் சிரிப்பு என இந்த ட்ரைலரை பார்க்கவே ஒரு தனி தைரியம் வேண்டும் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர் .

இப்படம் வரும் பிப்.15 ஆம் தேதி தமிழ் உளப்பட பல மொழிகளில் உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

படக்குழுவின் இந்த முயற்ச்சி வெற்றி கண்டு மம்மூட்டியின் வெற்றி படங்களில் ஒன்றாக இப்படம் இடம்பெறுமா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  IPL 2024 : தொடர் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்..? டெல்லியுடன் குஜராத் இன்று மோதல்..!!!

More in Cinema News

To Top