Connect with us

நடிகவேல் ஐயாவுடன் ஒப்பிட்ட சூப்பர்ஸ்டார்..வாழ்நாள் வெற்றியை அடைந்தேன் எஸ் ஜெ சூர்யா நெகிழ்ச்சி!

Cinema News

நடிகவேல் ஐயாவுடன் ஒப்பிட்ட சூப்பர்ஸ்டார்..வாழ்நாள் வெற்றியை அடைந்தேன் எஸ் ஜெ சூர்யா நெகிழ்ச்சி!

ஜிகர்தண்டா டபுள் X பட சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எஸ் ஜே சூர்யா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளதாகவும் குறிப்பாக இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை குறிஞ்சி மலர் என குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளது தங்கள் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய விருதாக எண்ணுகிறோம்…இது கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும் என பேசியுள்ளார் எஸ் ஜெ சூர்யா..

குறிஞ்சி மலர் என்கிற வார்த்தை மிகவும் அறிய வார்த்தை அதை போல் தங்களுடைய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் மிகவும் அரிய கிரியேட்டராகவே உள்ளார். அவரை கொண்டாடும் மக்களுக்கு நன்றி என சொல்லி இருக்கிறார் எஸ் ஜெ சூர்யா…

அவருடைய கேரியரில் மிகப்பெரிய பெஸ்ட் ஆகவே இப்படம் உள்ளதாக தான் நினைப்பதாக எஸ் ஜே சூர்யா தெரிவித்தார்,மேலும் இப்படத்தைப் பற்றி அவர் தன்னிடமும் ராகவா லாரன்ஸ் இடமும் இது தன்னுடைய கெரியரில் மிகவும் சிறந்த படம் என்பதை பகிர்ந்து கொண்டதாகவும் அதேபோல் நான் நல்ல நடிகனாக வேண்டும் என்று தான் சினிமாவிற்கு வந்தேன் அதனை நிறைவேற்றியது கார்த்திக் சுப்புராஜ் தான் அவருடைய இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படம் என தன்னுடைய பழைய முகத்தை மாற்றி நல்ல பாதைக்கு கொண்டு சென்றது என்று சொல்லி இருக்கின்றார்…

இந்த படத்தில் தன்னுடன் நடித்த ராகவா லாரன்ஸ்க்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்…அதனை தொடர்ந்து இந்த படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களின் ரசிப்பு திறன் நிறைய மாறி இருக்கின்றது என்றும் ரஜினிகாந்த் தன்னை நடிகவேல் ஐயாவுடன் ஒப்பிட்டு பேசியது இந்த பிறவி பலனை அடைந்ததாக உணர்கிறேன் என பேசி இருக்கின்றார் எஸ் ஜெ சூர்யா..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top