Connect with us

God Of Love படத்தின் மாஸ் அப்டேட்! சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி!

Featured

God Of Love படத்தின் மாஸ் அப்டேட்! சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி!

சிம்பு, தமிழ் சினிமாவில் சிறு வயதில் இருந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல், இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பல்வேறு துறைகளில் பன்முக திறமை கொண்டவர்.

தற்போது, சிம்பு கைவசம் பல படங்கள் உள்ளன. அதன்படி, “பார்க்கிங்” பட இயக்குநருடன் சிம்பு தனது 49-வது படத்தை உருவாக்கி வருகிறார். அதோடு, தனது 50-வது படத்தை சிம்பு தான் சொந்தமாக தயாரிக்கவிருக்கிறார். மேலும், “ஓ மை கடவுளே” மற்றும் “டிராகன்” பட இயக்குநருடன் சிம்பு, தனது 51-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் “God Of Love” என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், “எஸ்டிஆர் 51” படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்தில் தொடங்கும் என்றும், இப்படம் 2026-இல் வெளியாகும் என்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சில், “God Of Love” படமும் “ஓ மை கடவுளே”, “டிராகன்” படங்களுக்காக ரசிகர்களுக்கு பிடிக்குமென கூறியுள்ளார். இதனால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அட்லீ அடுத்த படத்திற்கு கேட்ட சம்பளம்.. தயாரிப்பாளர் அதிர்ச்சி!

More in Featured

To Top