Connect with us

சிம்புவின் மீது வழக்கு..பணத்தை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் மீண்டும் Red Card!

Cinema News

சிம்புவின் மீது வழக்கு..பணத்தை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் மீண்டும் Red Card!

தமிழ் சினிமாவில் பெரிய இடத்தில இருக்கும் ஒருவர் தான் சிம்பு…குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி – இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருந்து வருகிறார் சிம்பு…இவரின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெரிய இடத்தில் இவர் இருக்கின்றார்…

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் ஹிட் படங்களை கொடுக்காத சிம்பு மீது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்ட் விதிக்க உள்ளதாக சில தகவல்களும் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…அது பெரிதளவில் பேசவும் பட்டிருந்தது என்றும் சொல்லாம்…

நடிகர் சிம்பு தான் ஒப்புக்கொண்ட படங்களுக்காக முன்பணமும் வாங்கிவிட்டு படப்பிடிப்புக்கு செல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறி தொடர்ச்சியாக அவர் மீது வழக்குகள் வைக்கப்பட்டு இருக்கின்றது.இதன் ஒரு பகுதியாக வேல்ஸ் நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு தயாரிக்க இருந்த கொரோனா குமார் என்கின்ற திரைப்படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமானார்…அதன் பின் வேலைகள் துவங்க ஆரம்பம் ஆனது…

சுமார் 9 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு பேசப்பட்டதாகவும் அதில் நான்கு கோடி ரூபாய் அவருக்கு முன்பணமாக அளிக்கப்பட்டதாகவும் வேல்ஸ் நிறுவனம் தற்பொழுது தெரிவித்துள்ளது.ஆனால் அட்வான்ஸ் தொகையை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு படபிடிப்பிற்கு வரவில்லை என்றும் இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் வேல்ஸ் தயாரிப்ப நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது…

அங்கு அவர்களுக்கு இந்த முறை நிரந்தர தீர்வு கிடைகும் என சொல்லப்பட்டு இருக்கின்றது..சிம்பு இப்போது பணத்தை வட்டியுடன் தரும் கட்டாயம் இருப்பதாகவும் தெரிகின்றது இல்லையென்றால் மீண்டும் Red Card போடும் நிலை வரலாம் என சொல்லப்படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இணையத்தை கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர்..!!

More in Cinema News

To Top