Connect with us

கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க சிவராஜ் குமாருக்கு இத்தனை கோடி சம்பளமா..?

Cinema News

கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க சிவராஜ் குமாருக்கு இத்தனை கோடி சம்பளமா..?

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் மிரட்டலான நடிப்பில் செம மாஸாக உருவாகி உள்ள திரைப்படம் படம் கேப்டன் மில்லர்.

மிக பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் குளோபல் ஸ்டார் தனுஷுடன் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் டாப்பு டக்கராக தயாராகி உள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் இருந்து தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் உடன் திரையில் கெத்து காட்டிய நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தில் நடித்ததற்காக சுமார் 3 கோடி வரை சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஜஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங்கில் மிரட்டுமா ஹைதராபாத் - டாஸ் வென்ற SRH பேட்டிங் தேர்வு..!!

More in Cinema News

To Top