Connect with us

பாலா இயக்கத்தில் உருவான ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது…!!

Cinema News

பாலா இயக்கத்தில் உருவான ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது…!!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

உணர்ச்சிகர படங்களுக்கு பெயர் போன இயக்குனர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் இயக்குனர் பாலா . இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும் இவரது படங்கள் காலம் கடந்து பேசும் அளவிற்கு மக்கள் மனதில் பதிந்து போய் உள்ளது .

அந்தவகையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் வணங்கான். ஆரம்பத்தில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் சூர்யா சில பல காரணங்களால் பாதிலேயே வெளியேறினார் .

இதையடுத்து. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய் ஒப்பந்தமானார் . அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படம் குறித்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது .

இந்நிலையில் தற்போது ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. .

ஆரம்பத்திலேயே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் வணங்கான் படம் பாலாவின் ஹிட் லிஸ்டில் இணையுமா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சொந்த மண்ணில் ஜொலிக்குமா DC..? டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு..!!!

More in Cinema News

To Top