Connect with us

அசோக் செல்வனின் சபா நாயகன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியானது..!!

Cinema News

அசோக் செல்வனின் சபா நாயகன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியானது..!!

அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அசோக் செல்வனின் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சபா நாயகன் இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் அசோக் செல்வனுடன் கைகோர்த்து இயக்குனராக களமிறங்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் அசோக் செல்வன் தற்போது மீண்டும் முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தில் நடித்துள்ள இப்படத்தை கிளீயர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா மற்றும் கேப்டன் மெகா என்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் முதல் சிங்கள் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்திலிருந்து சீமக்காரியே எனத் தொடங்கும் இரண்டாவது சிங்கள் பாடல் வௌியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கலக்கிய நடிகை மாளவிகா மோகனன் Viral Photos..

More in Cinema News

To Top