Connect with us

“அமீர்கானுக்கும் உதவியவர், ஏழை ரசிகருக்கும் ஏன் ஒரு படகுகூட விடவில்லை..! தல அஜிதை கிழிக்கும் நடிகர் போஸ் வெங்கட்!”

Cinema News

“அமீர்கானுக்கும் உதவியவர், ஏழை ரசிகருக்கும் ஏன் ஒரு படகுகூட விடவில்லை..! தல அஜிதை கிழிக்கும் நடிகர் போஸ் வெங்கட்!”

சென்னையின் முக்கியமான சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்துவிட்டாலும் இன்னும் பல பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருக்கிறது. இதனால் அங்கிருக்கும் மக்கள் எல்லாம் உணவுக்கு, தண்ணீருக்கு என தவித்துவருகின்றனர். தீயணைப்பு வீரர்களும், தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இதற்கிடையே நேற்று முன் தினம் காரப்பாக்கத்தில் விஷ்ணு விஷால் குடும்பமும், தனது தாயின் சிகிச்சைக்காக அங்கு இருந்த பாலிவுட் நடிகர் அமீர்கானும் வெள்ளத்தில் சிக்கினர். பிறகு அவர்கள் தீயணைப்பு வீரர்கள் துணையுடன் படகின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது.

விஷ்ணு விஷால் மீட்கப்பட்ட சில மணி நேரத்தில் இன்னொரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அதில் இருந்தது அஜித்குமார். அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் நிலை பற்றி பொதுவான நண்பர் மூலம் அறிந்த எப்போதும் உதவக்கூடியவரான நடிகர் அஜித் எங்கள் வில்லா நண்பர்களுக்கும் போக்குவரத்து உதவிகளை செய்துகொடுத்தார். லவ் யூ அஜித் சார்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் அஜித்குமாரை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்…. (உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்கலாம்)” என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ்-நயன்தாரா பிரச்சனை: "கர்மா என்ன சொல்கிறது?" என நடிகையின் பதில்..

More in Cinema News

To Top