Connect with us

நானி – எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகும் ‘சரிபோதா சனிவாரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது..!!

Cinema News

நானி – எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகும் ‘சரிபோதா சனிவாரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது..!!

நானி மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் ‘சரிபோதா சனிவாரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி அதேபோல் இந்த பக்கம் தமிழ் சினிமாவின் படு பேமஸ் ஆன குணசித்ர நடிகராக வலம் வருபவர் நடிகர் எஸ் ஜே சூர்யா.

இந்த இரு பெரும் நட்சத்திரங்களும் சேர்ந்து தற்போது ஒரு மாஸ் பட்ஜெட் படத்தில் நடித்து வருகின்றனர்

ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நானி – எஸ் ஜே சூர்யா ஆகியோருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் அடித்துக்கட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு சிறப்பான சர்ப்ரைஸ் ஒன்றை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

அது என்னவென்றால் நானியின் பிறந்தநாளை முன்னிட்டும் ரசிகர்களின் ஆசையை தீர்க்கும் வகையிலும் நானி – எஸ் ஜே சூர்யா நடித்துவரும் ‘சரிபோதா சனிவாரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது . இதுமட்டுமின்றி இப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top