Connect with us

மாஸ் பட்ஜெட்டில் விரைவில் சர்தார் 2 – வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

Cinema News

மாஸ் பட்ஜெட்டில் விரைவில் சர்தார் 2 – வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

கார்த்தியின் நடிப்பில் திரையரங்குகளில் பட்டய கிளப்பிய சர்தார் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தனது நேர்த்தியான நடிப்பால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கார்த்தி.

பருத்தி வீரனில் ஆரம்பித்து தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கின்றார்.

கமர்ஷியல் படங்களாக இருக்கட்டும், வித்யாசமான கதைக்களங்கள் உள்ள படமாக இருக்கட்டும் அனைத்திலும் கலக்கி வருகிறார் .

இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தியின் மாறுபட்ட இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார் .

இப்படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ள கார்த்தி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருப்பர் . கார்த்தியின் நடிப்பும் படத்தின் கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்ததால். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது.

அடுத்த மாதம் பிப்ரவரி 2ம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் பூஜை உடன் தொடங்க உள்ளதாம் . இதுமட்டுமின்றி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தினை அதிக பட்ஜெட்டில் எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என்றும் ஒருபக்கம் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சர்தார் படத்தின் முதல் பாகத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த நிலையில், சர்தார் 2க்கு யுவன் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரன் குவிப்பில் மீண்டும் சாதனை படைக்குமா SRH..? ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று RCB - SRH அணிகள் மோதல்..!!!

More in Cinema News

To Top