Connect with us

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் முதல் தோற்றம் வெளியீடு..!!

Cinema News

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் முதல் தோற்றம் வெளியீடு..!!

நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட முன்னணி ஹீரோக்களின் நண்பனாக திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் சந்தானம் .

உச்ச நட்சத்திரங்கள் முதல் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் வரை அனைத்திலும் காமெடியியல் கலக்கி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார் .

இதையடுத்து தமிழ் சினிமாவின் கலக்கல் நாயகனாக வலம் வரும் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி.

காமெடிக்கு பஞ்சமில்லாத இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டீசெண்டான வசூலையும் ஈட்டியது.

இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தற்போது புதிதாக உருவாகி வரும் படம் தான் ‘இங்கு நான்தான் கிங்கு’ .

ஆனந்த் நாராயண் இயக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். மேலும் இவர்களுடன் தம்பி ராமையா, மறைந்த நடிகர் மனோபாலா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பாலசரவணன், ’லொள்ளு சபா’ மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க கோபுரம் பிலிம்ஸ் இப்படத்தில் மினிமம் பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளை தான் வேணும் - திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மிருணாள் தாகூர்..!!

More in Cinema News

To Top