Connect with us

SA v IND: மழையால் கைவிடப்பட்ட முதல் T20 போட்டி..!

Sports

SA v IND: மழையால் கைவிடப்பட்ட முதல் T20 போட்டி..!

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 Test, 3 ஒரு நாள் மற்றும் 3 T20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை BCCI சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தது.

இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவருக்கும் T20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு KL ராகுல் கேப்டனாகவும், T20 போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி 7-ம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறுகிறது.

இந்த தொடரின் முதல் T20 போட்டி டர்பன் நகரில் நேற்று நடைபெற இருந்தது. ஆனாலும் தொடர்ந்து மழை பொழிந்து கொண்டே இருந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. தொடரின் அடுத்த போட்டி நாளை நடைபெற உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

Advertisement
 

Trending

 
Advertisement
To Top